கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இந்திய திரைப்பட பிரபலம் ? - ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து போகியுள்ளது. எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் வெளியே வர முடியாத சூழல். மேலும் வணிகம் உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தொழில் நிறுவனங்கள் முடிந்த வரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரபல பாலிவுட் பாடகர் கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது | Popular Bollywood Singer Kanika Kapoor of Sunny Leo

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தற்போது அதற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசனும் ட்வீட் செய்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனோ தொற்று இருப்பதாக அறிவிக்க அந்த பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒரு சில ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா பாதித்தது குறித்து அறிவித்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் பாடகர் கனிகா கபூர் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர் கொரோனா  பாதித்த முதல் இந்திய திரைப்பட பிரபலம் என்று கூறப்படுகிறது.  கனிகா கபூர் சன்னி லியோனின் 'பேபி டால்' பாடல் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில் அவர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''கடந்த 4 நாட்களாக எனக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. பரிசோதித்து பார்த்த போது கொரோனா இருப்பது உறுதியானது. நானும் எனது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hello everyone, For the past 4 days I have had signs of flu, I got myself tested and it came positive for Covid-19. My family and I are in complete quarantine now and following medical advice on how to move forward. Contact mapping of people I have been in touch with is underway aswell. I was scanned at the airport as per normal procedure 10days ago when I came back home, the symptoms have developed only 4 days ago. At this stage I would like to urge you all to practice self isolation and get tested if you have the signs. I am feeling ok, like a normal flu and a mild fever, however we need to be sensible citizens at this time and think of all around us. We can get through this without panic only if we listen to the experts and our local, state and central government directives. Wishing everyone good health. Jai Hind ! Take care, KK

A post shared by Kanika Kapoor (@kanik4kapoor) on

உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள். காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தும் நான் நார்மலாக தான் உணர்ந்தேன்.  ஆனால் இப்பொழுது எனக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். நமது மருத்துவர்கள், அரசு அதிகாரிகளின் உதவியால் இதிலிருந்து வெளியேறலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Entertainment sub editor