www.garudabazaar.com

KAMAL HAASAN : இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டர்.. இது ஆண்டவர் BIRTHDAY ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Kamal Haasan Birthday Indian 2 Movie Special Poster

Also Read | KamalHaasan : 68வது பிறந்த நாளை கொண்டாடும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்..! ரசிகர்கள் வாழ்த்து ..

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

 Kamal Haasan Birthday Indian 2 Movie Special Poster

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

 Kamal Haasan Birthday Indian 2 Movie Special Poster

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது  நடந்து வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

 Kamal Haasan Birthday Indian 2 Movie Special Poster

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்‌. அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இச்சூழலில் இந்தியன் 2 படத்தின் படக்குழு சார்பில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்து, "பன்முகத் திறமை வாய்ந்த எங்களின் பொக்கிஷம் கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

 

Also Read | விஷூவல் அனுபவத்துக்காக கூடுதல் பணி... தள்ளி போகும் பிரபாஸின் ஆதி புருஷ்.!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Birthday Indian 2 Movie Special Poster

People looking for online information on Indian 2, Indian 2 Movie Special Poster, Kamal Haasan, Kamal Haasan birthday will find this news story useful.