’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தாய்லாந்து பறந்த பிரபல நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 17, 2019 03:36 PM
மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கார்த்திக் பிரபு, பார்த்திபன், ஐஷ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்ஷ்மி என்று ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தற்போது இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் ரியாஸ் கான் இப்படத்தில் ஒரு முக்கிய வேட த்தில் நடிக்கிறார். இவர் கஜினி, வின்னர், ஆளவந்தான் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது தன் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி உள்ள அவர், பொன்னியின் செல்வன் படத்துக்காக தாய்லாந்தில் உள்ள கிர்பி தீவுக்கு வந்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.