''கொரோனா ஆபத்து முடிந்த பிறகு நாம கண்டிப்பா இத பண்ணனும்'' - காஜல் அகர்வால் சொன்ன செம ஐடியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படாததால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுதலே ஒரே தீர்வு என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Kajal Aggarwal comes up with an innovative idea to save Indian business after Coronavirus crisis | கொரோனா ஆபத்து முடிந்த பிறகு இந்தியாவுக்காக செம ஐடியா ச

இதனையடுத்து இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் வாய்ப்பு உள்ளதால், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள்,  மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் வணிகம் உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், கொரோனா பிரச்சனைகள் மற்றும் அதன் ஆபத்துகள் முழுவதும முடிந்த பிறகு, நமது நாட்டுக்காக சில நன்மைகள் செய்வோம். 

நமது விடுமுறை நாட்களை இந்தியாவில் செலவிடுவோம், உள்ளூர் உணவகங்ககளில் சாப்பிடுவோம், உள்ளூர் பழங்கள், காய்கறிகளை வாங்குவோம், இந்திய நிறுவனங்களின் உடைகள் மற்றும் பொருட்களை வாங்குவோம், உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்போம். காரணம் இந்த தொழில்கள் நமது உதவியின்றி மீண்டு வருவது சற்று சிரமமானது'' என்று குறிப்பிட்டுள்ளார்

Entertainment sub editor