Vilangu Others
www.garudabazaar.com

வயிற்றில் குழந்தையுடன் காஜல் அகர்வாலின் வளைகாப்பு PHOTOS! பளபளப்பை பாருங்க சும்மா அள்ளுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் தனது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Kajal Agarwal Baby Shower Function Photos Went Viral on Instagram

சமந்தா நடிக்கும் புதிய படம்! 3 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட செட்! படக்குழு வெளியிட்ட BTS PHOTOS!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது.

Kajal Agarwal Baby Shower Function Photos Went Viral on Instagram

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் திரைப்படங்கள் வெளிவரவில்லை.

Kajal Agarwal Baby Shower Function Photos Went Viral on Instagram

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Kajal Agarwal Baby Shower Function Photos Went Viral on Instagram

திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தின் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார்.

Kajal Agarwal Baby Shower Function Photos Went Viral on Instagram

இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தள்ளிப்போன பிரபாஸின் PAN INDIA திரைப்படம்.. நன்றி சொன்ன அமீர் கான்! பின்னணி தகவல்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Agarwal Baby Shower Function Photos Went Viral on Instagram

People looking for online information on காஜல் அகர்வால், கோமாளி படம், வளைகாப்பு, விவேகம், Baby shower function, Kajal Agarwal will find this news story useful.