சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துவரும் படம் ஜாக்பாட். இந்த படத்தில் ஜோதிகா, ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை குலேபக்காவலி இயக்குநர் கல்யாண் இயக்குகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் கல்யாண், ஹன்சிகாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படம் ஹாரர் ஜானரில் உருவாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த செய்திகள் அனைத்தும் பொய் என தெரியவந்துள்ளது. மேலும் இயக்குநர் கல்யாண் மாஸ் ஹீரோவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் . இந்த படம் குறித்த அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.