www.garudabazaar.com

வெங்கட் பிரபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. சிம்பு படத்துக்கும் இதுக்கும் செம கனெக்ஷன் இருக்கே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி, அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

venkat prabhu new movie first look released cast details

சென்னை 600028 திரைப்படம் மூலம், இயக்குனராக அறிமுகம் ஆனவர் வெங்கட் பிரபு. அதன் பிறகு, 'சரோஜா', 'மங்காத்தா' உள்ளிட்ட பல திரைப்படங்கள் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடைசியாக, இவரது இயக்கத்தில், 'மாநாடு' என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படம் மக்களிடையே, அமோக வரவேற்பை பெற்றிருந்தது. டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், சற்று குழப்பம் உள்ள ஜானர் வகையைச் சேர்ந்தது என்றாலும், மிகவும் அசத்தலாக, அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு.

வெற்றிகரமாக ஓடும் மாநாடு

அதே போல, வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யா நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. சீரியஸ் கதைகளைக் கூட, மிகவும் ஜாலியாக எடுப்பதில், இயக்குனர் வெங்கட் பிரபு மிகவும் தேர்ந்தவர். அதனை மாநாடு திரைப்படத்திலும், சிறப்பாக செய்திருந்தார். மாநாடு திரைப்படம், 50 நாடுகளைக் கடந்து, இன்னும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அடுத்த திரைப்படம்

இதனிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில், அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 'மன்மத லீலை' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். மிகவும் வித்தியாசமாக, அசோக் செல்வனின் இரண்டு கதாபாத்திரங்களைக் குறிக்கும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது.

 

சிம்பு படத்துடன் உள்ள கனெக்ஷன்

அது மட்டுமில்லாமல், சிம்பு படம் ஒன்றிற்கும், மன்மத லீலை படத்தின் போஸ்டருக்கும், அசத்தல் கனெக்ஷன் உள்ளது. 'மன்மத' என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெறும் வார்த்தை, சிம்புவின் நடிப்பில் வெளியான 'மன்மதன்' படத்தின் எழுத்து வடிவைப் போலவே உள்ளது. இது பற்றியும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படக்குழு

'மன்மத லீலை' திரைப்படத்தில் அசோக் செல்வனுடன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு, வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு தமிழ் அழகன் கேமராமேனாக பணிபுரியவுள்ளார். பொதுவாக, வெங்கட் பிரபு படத்திற்கு, பிரவீன் கே.எல் தான் எடிட்டிங் பணிகளை மேற்கொள்வார். ஆனால், 'மன்மத லீலை' திரைப்படத்தில், வெங்கட் ராஜன் எடிட்டராக பணிபுரியவுள்ளார். இந்த படத்தினை, ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், முருகானந்தம் தயாரித்துள்ளார்.

வெங்கட் பிரபு 'Quickie'

அதே போல, வெங்கட் பிரபு திரைப்படத்தின் பெயருக்கு கீழ், ஒரு டேக் இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, மங்காத்தா திரைப்படத்தில், வெங்கட் பிரபு கேம் என இடம்பெற்றிருக்கும். அதே போல, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்திலும், வெங்கட் பிரபு பாலிடிக்ஸ் என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும்.

அதே போல, மன்மத லீலை திரைப்படத்திலும், வெங்கட் பிரபு குயிக்கி (A Venkat Prabhu Quickie) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மன்மத லீலை, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் பத்தாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் கிட்டதட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

venkat prabhu new movie first look released cast details

People looking for online information on Ashok Selvan, Maanaadu Tamil, Manmadha Leelai, Premgi Amaren, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.