www.garudabazaar.com

Brahmāstra:Part One – Shiva: "அமிதாப் பச்சனுக்கு அப்றம் பிடிச்ச நடிகர்" - Junior NTR பேச்சு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில்  செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா.

Junior NTR Abour Ranbir Brahmāstra:Part One – Shiva

Also Read | Megham Karukatha: திருச்சிற்றம்பலம் மேகம் கருக்காதோ பாட்டுக்கு டான்ஸ்.. வைரலான ஜப்பான் ஜோடி.!

அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர்  கரன் ஜோகர் தயாரித்துள்ளார். பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர். இப்படத்தில் நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்கள். தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை தென்னிந்தியாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார்.

Junior NTR Abour Ranbir Brahmāstra:Part One – Shiva

இப்படம் தொடர்பாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டு பேசினார். அதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோருடன் எஸ்.எஸ்.ராஜமௌலி, நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர். எஸ்.எஸ்.ராஜமௌலியின் யமதொங்கா, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் பிரம்மாஸ்திரா படம் குறித்து வாழ்த்தி பேசினார். அப்போது ரன்பீர் கபூர் பற்றியும் பேசினார்.

Junior NTR Abour Ranbir Brahmāstra:Part One – Shiva

அதில்,  “நிறைய நடிகர்களை இந்திய சினிமாவில் எனக்கு பிடிக்கும். அவர்களுள் மனதிற்கு நெருக்கமானவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் அமிதாப் பச்சனின் நடிப்பு, அவருடைய உடல்மொழி, பேச்சு ஆகியவை எனக்கு பிடிக்கும்.  அந்த வகையில் அவருக்கு பின் எனக்கு பிடித்த நடிகர் ரன்பீர் கபூர். ராக்ஸ்டார் படத்தில் அவரது நடிப்பு என்னுள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னை ஊக்குவிக்கவும் செய்தது.  ரன்பீர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும்தான். என்றாலும் எனக்கு 'ராக்ஸ்டார்' மிகவும் பிடிக்கும். அவருடன் இந்த மேடையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி” என்று ஜூனியர் என்.டி.ஆர் பேசினார்.

Also Read | Vijay TV Pugazh: "நீங்களே மகனா பிறக்கணும்..".. வடிவேல் பாலாஜி குறித்து புகழ் உருக்கம்.

தொடர்புடைய இணைப்புகள்

Junior NTR Abour Ranbir Brahmāstra:Part One – Shiva

People looking for online information on BrahmastraPart One, BrahmāstraPart One – Shiva, Junior NTR, SS Rajamouli will find this news story useful.