விஜய் சேதுபதி இயக்குநருடன் இணையும் நிஜ அப்பா - மகள் காம்போ - இந்த படத்தின் ரீமேக்கா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள படம் ஹெலன் தமிழில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

junga gokul to remake helen in tamil with arunpandian daughter

ரௌத்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கோகுல். விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தை ரீமேக் செய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிசா கடையின் ஃப்ரீசர் ரூமில் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண் உயிர் பிழைக்க நடத்திய போராட்டமும் அவளை தேடும் அப்பாவின் தவிப்புமே ஹெலன் படத்தின் கருவாகும். இத்திரைப்படத்தில் அப்பாவாக சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த லாலும் கும்பலங்கி நைட்ஸ் படத்தில் நடித்த அன்னா பென்னும் நடித்திருந்தனர். இந்நிலையில் ஹெலன் ரீமேக்கில் நிஜ அப்பா-மகளான அருண்பாண்டியனும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கின்றனர்.  இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

Entertainment sub editor