Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

Naai Sekar Returns, Vadielu: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. வைரல் ஆகும் வடிவேலுவின் புதிய கெட்டப்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 10 பிப்ரவரி 2022: இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர் நடிகர் வடிவேலு.

Naai Sekar Returns Vadielu look viral photo trending

மீம்ஸ் மன்னன்

சமூகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் வடிவேலுவை தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். மீம்ஸ் மன்னன் என்று சொல்லும் அளவுக்கு எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வடிவேலுவின் ரியாக்‌ஷன்கள், வசனங்கள், பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும்.

Also Read: "முதல்வருக்கு சிரஞ்சீவி நன்றி" .. "மறக்க முடியாது" - நெகிழும் மகேஷ் பாபு.. உடன் ராஜமௌலி..

நாய் சேகர் ரிட்டன்ஸ்

முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் படத்திலும், பின்னர் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா திரைப்படத்திலும் தோன்றிய நடிகர் வடிவேலு, கொஞ்ச காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

நாய் சேகர் கேரக்டர்

நடிகர் வடிவேலு நடிப்பில், பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்த முக்கியமான கேரக்டர் நாய் சேகர். இந்த கேரக்டர் தலைநகரம் திரைப்படத்தில் அனைவரையும் கவனிக்க வைத்த காமெடி கேரக்டர். 2006-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்கியவர் சுராஜ். சுந்தர்.சி நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த எபிக் கேரக்டர்தான் ‘நாய் சேகர்’. இந்த கேரக்டர் தான் தற்போது வடிவேலு நடிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் டீஸர்

நடிகை ஷிவானி முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் குட்டி டீஸர் அண்மையில் வெளியாகி இருந்தது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் உருவாகி இருந்த இந்த டீசரில் வடிவேலு சில சிறப்பு சப்தங்களை கொடுத்திருந்தார்.

வைரலாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கெட்டப்

இந்நிலையில்தான் நடிகர் வடிவேலுவை சந்தித்துள்ள பிரபல தயாரிப்பாளர் மற்றும் மதுரை ஏரியா வலிமை திரைப்பட விநியோகஸ்தர் ‘மதுரை’ அன்பு செழியன், தமது இல்ல திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்து பத்திரிகை கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Also Read: ரெண்ட் ஆகும் மதுரை அன்புச் செழியனின் இல்லத்திருமண செய்தி.. மணமக்களின் Viral ஃபோட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Naai Sekar Returns Vadielu look viral photo trending

People looking for online information on நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வடிவேலு, Naai Sekar Returns, Vadivelu will find this news story useful.