Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

Thalaivar169: ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படம். டைரக்டர், மியூசிக் டைரக்டர் இவங்க தான்.. ‘கொலமாஸ்’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Thalaivar169, சென்னை, 10, பிப்ரவரி 2022 :- சூப்பர் ஸ்டார், தலைவர்  என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படம் தொடர்பான மெகா அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Thalaivar169 Rajinikanth Nelson Anirudh Sun Pictures trending

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் கடந்த ஆண்டுகளில் ஒளிபரப்பான திரைப்படங்களில், டெலிவிஷன் பிரீமியர் மற்றும் ஓடிடி பிரீமியரில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிய திரைப்படமாக பெயர் பெற்றது. அண்ணாத்த திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

டாக்டர்

இதுபோல் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். நேரடியாக திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் டார்க் ஹ்யூமர் ரக திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாளுக்கு பிறகு தியேட்டர் திறக்கப்பட்டபோது, வெளியாகிய இந்த படத்தை மக்கள் வெகுவாக ரசித்தனர்.

பீஸ்ட்

இதனிடையே இயக்குநர் நெல்சன் திலீப் குமார், தளபதி விஜய் நடிக்கும் 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தை இயக்கத் தொடங்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த பின்னர், இதற்கான அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது இந்த படத்தில் இருந்து  முதல் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 14ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து என்கிற, பாடல் வெளியாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

இந்த நிலையில் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க கூடிய புதிய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை பற்றி தான் காலை முதல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவை அனைத்தையும் பூர்த்தி செய்ததுடன், புதிய எதிர்பார்ப்பையும் எகிறவைத்துள்ளது இந்த மெகா அறிவிப்பு.

Thalaivar169 Rajinikanth Nelson Anirudh Sun Pictures trending

#Thalaivar169

ஆம், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க கூடிய 169 -வது திரைப்படம் என்று இந்த படம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு தற்காலிகமாக #Thalaivar169 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார்.

இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் பரபரப்பு குட்டி ப்ரோமோவில், அனிருத், நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினிகாந்த் மூவரும் ஸ்டைலாக தோன்றுகின்றனர். இந்த அறிவிப்பு இந்த வருடத்தின் இன்னொரு பரபரப்பு மற்றும் ட்ரெண்டிங் அறிவிப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "முதல்வருக்கு சிரஞ்சீவி நன்றி" .. "மறக்க முடியாது" - நெகிழும் மகேஷ் பாபு.. உடன் ராஜமௌலி.. என்ன ஸ்பெஷல்?

தொடர்புடைய இணைப்புகள்

Thalaivar169 Rajinikanth Nelson Anirudh Sun Pictures trending

People looking for online information on Nelson Dilipkumar, Rajinikanth, Sun pictures, Superstar Rajinikanth, T65, Thalaivar Rajinikanth, Thalapathy65, ThalapathyVijay will find this news story useful.