காதல் முதல் கல்யாணம் வரை..! - திருமண வாழ்க்கை குறித்து மனம் திறக்கும் Anchor அனிதா சம்பத்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 31, 2019 04:02 PM
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக அறியப்படும் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தனது திருமண வாழ்க்கை குறித்து நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் ப்ரைம் டைமில் செய்தி வாசிப்பாளராக தோன்றிய அனிதா சம்பத், சமூக வலைதளங்களில் ஆர்மிகள் உருவாகி பிரபலமானார். இதைத் தொடர்ந்து, ‘சர்கார்’, ‘காப்பான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் தோன்றினார். இந்நிலையில், தனது காதலரான பிரபாகரன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.
சமீபத்தில் Behindwoods-க்கு அவர் அளித்த பேட்டியில், தனது திருமண வாழ்க்கை குறித்த விஷயங்களை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துக் கொண்டார். அப்போது, 3 ஆண்டுகளாக காதலித்தும், தற்போது திருமணத்திற்கு பிறகும் கூட தனது கணவர் ‘I Love You’ சொல்லவில்லை என்று செல்லமாக வருத்தப்பட்டார். அதற்கு அவரது கணவர், நமக்கு குழந்தை பிறக்கும் அந்த நிமிடம் ‘I Love You’ சொல்வேன் என உறுதியளித்தார்.
இதனையடுத்து, அனிதா சம்பத்தின் திடீர் கல்யாணம் குறித்தும், அவரது கணவர் குறித்தும் பரவிய சில தகவல்கள் பற்றி அனிதா சம்பத் மனம் திறந்து பேசினார். ‘மிகவும் பிரபலமான ஒருவரையோ, சினிமா நடிகரையோ நான் மணந்துக் கொள்வேன் என பலரும் கருதினார்கள். அதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆரம்பத்தில் இருந்தே எல்லா நிலைகளிலும் என்னுடன் இருக்கும் இவரை இழந்தால் நான் முட்டாள்’.
‘பிரபலமான ஒருவரையோ, நடிகரையோ திருமணம் செய்திருந்தால், பணம் தான் அதிகரித்திருக்கும். ஆனால், 10 பைசா இல்லாமல் இருந்தால் கூட இருவரும் கைக்கோர்த்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவோம் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.
காதல் முதல் கல்யாணம் வரை..! - திருமண வாழ்க்கை குறித்து மனம் திறக்கும் ANCHOR அனிதா சம்பத்! வீடியோ