மணிரத்னம் - ஐஸ்வர்யா ராயின் பொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 07:45 PM
செக்கச்சிவந்த வானம் படத்துக்கு பிறகு மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவிருக்கிறார். கல்கி எழுதிய வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்த படத்துக்கு அபியும் நானும் சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த குமாரவேல் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் ஜெயராம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். அந்த படத்தை பற்றி இப்போதைக்கு என்னால் எதுவும் கூற இயலாது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய படமாக உருவாகும் இந்த படத்தில் அதிமுக்கிய வேடத்தில் நடிக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.