தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் - வெடிய போடு.. பிகிலு சத்தம் சும்மா காத கிழிக்க வேண்டாமா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 21, 2019 12:52 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய், வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியதிலிருந்து ரசிகர்கள் அந்த பாடலுக்காக தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்த படத்தில் தனது பணிகளை நிறைவு செய்த விஜய், படத்தில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 27-ம் தேதி இப்படம் வெளியாகும் என முன்பே கூறப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், விஜய் ரசிகர்கள் பிகில் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காரணத்தை மனதில் கொண்டும், நான்கு நாட்கள் முன்னதாக அதாவது, அக்டோபர் 24-ம் தேதி பிகில் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம் தயாரிப்பு நிறுவனத்தினர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.மேலும் இப்படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் சென்சார் குழுவிற்கு அனுப்ப தித்தமிட்டுள்ளனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.