‘நேர்கொண்ட பார்வை’-யை தொடந்து போனி கபூர் தயாரிக்கும் Sports படத்தின் டைட்டில் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் போனி கபூர் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

Boney Kapoor Ajith Ajay Devgn Keerthy Suresh Sports film look

சமீபத்தில் போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் நடித்திருந்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ஹெச்.வினோத இயக்கியிருந்தார். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பாலிவுட்டில் போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் தற்போது பயோபிக் திரைப்படங்களின் வருகை அதிகமாகி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் பயோபிக்கும் உருவாகிறது. இப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘தேசிய விருது’ வென்ற தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

ஹிந்தியில் ‘பதாய் ஹோ’ என்ற படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஆகாஷ் சவ்லா, அருணவ ஜாய் செங்குப்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 1950-1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் வகையில் உருவாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘மைதான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து விளையாட்டின் பொன்னான காலம் என்பதை குறிப்பிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.