Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

PS1: "947 CE-ல இருந்தே உங்க கன்ட்ரோல்லதான்.."- பிரகாஷ் ராஜை Tag செய்த ஜெயம் ரவி.. வைரல் மீம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

father and son from 947 CE Jayam ravi viral meme prakash raj PS1

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையாக “பொன்னியின் செல்வன்” திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயம் ரவி இருவரையும் குறித்த ஒரு வைரல் மீம் டெம்ப்லேட் பரவி வருகிறது. இதனை பகிர்ந்த ஜெயம் ரவி, நடிகர் பிரகாஷ் ராஜை ட்விட்டரில் டேக் செய்திருக்கிறார். எம்.குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்களில் பிரகாஷ்ராஜ் ஜெயம் ரவிக்கு அப்பாவாக நடித்திருப்பதை அடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் பொன்னியின் செல்வனாக வரும் ஜெயம் ரவிக்கு அப்பா சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ் வருவது குறித்த புகைப்படங்கள் இந்த மீமில் இடம் பெற்றுள்ளன.

அதாவது இவர்களுக்குள் இருக்கும் அப்பா மகன் உறவு என்பது 947 CE-ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறது என்று கூறும் இந்த மீம் டெம்ப்ளேட்டை ஜெயம் ரவி பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக இந்த மீமில் சந்தோஷப் பிரமணியன் படத்தில் பேசக்கூடிய புகழ்பெற்ற வசனமான, “இப்ப கூட உங்க கண்ட்ரோல்ல தான் அப்பா நான் இருக்கேன்” என்று ஜெயம் ரவி பேசும் வசனத்தை சற்றே மாற்றி, தன்னுடைய கடந்த காலத்தையும் தெரிந்து கொண்ட ஜெயம் ரவி, “அப்ப கூட நான் உங்க கண்ட்ரோல்ல தான் அப்பா இருந்து இருக்கேன்” என்று பேசுமாறு குறிப்பிட்டு இருக்கின்றனர். இந்த மீம் வைரலாகி வருகிறது.

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையில் ஒளிபரப்பாகி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

father and son from 947 CE Jayam ravi viral meme prakash raj PS1

People looking for online information on Jayam Ravi, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, Prakash Raj will find this news story useful.