Maha
www.garudabazaar.com

'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக்.. பட ரிலீசை முன்னிட்டு ஜான்வி கபூர் போட்டோஷூட்! வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரை உலகின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜான்வி கபூர்.

Janhvi Kapoor Good Luck Jerry Promotion Photoshoot Pictures

Also Read | 2500 தியேட்டர்களில் ரிலீசாகும் THE LEGEND.. ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைத்த நடிகர் சரவணன்!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில படங்கள் நடித்து வந்த ஜான்வி கபூர், தமிழில் நயன்தாரா நடிப்பில், நெல்சன் இயக்கி இருந்த "கோலமாவு கோகிலா" படத்தின் ஹிந்தி ரீமேக்கில், முதன்மை கதாபாத்திரத்திலும் தற்போது நடித்துள்ளார்.

Janhvi Kapoor Good Luck Jerry Promotion Photoshoot Pictures

"குட் லக் ஜெர்ரி" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வரும் ஜூலை 29 ஆம் தேதி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இதற்காக நடிகை ஜான்வி கபூர் புதிய ப்ரோமோஷன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்களில் நீல நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் நடிகை ஜான்வி கபூர் தோன்றியுள்ளார்.

Janhvi Kapoor Good Luck Jerry Promotion Photoshoot Pictures

'குட் லக் ஜெர்ரி' திரைப்படமும் கோலமாவு கோகிலாவை போல, இந்த திரைப்படமும் பிளாக் காமெடி வகையில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

சித்தார்த் சென்குப்தா இயக்கிய இந்த "குட் லக் ஜெர்ரி" படத்தில், ஜான்வி கபூர் ஜெய குமாரி என்கிற ஜெர்ரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான்வி கபூருடன் தீபக் டோப்ரியால், மிதா வசிஷ்ட், நீரஜ் சூட் மற்றும் சுஷாந்த் சிங் உள்ளிட்டோரும் குட் லக் ஜெர்ரி திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Janhvi Kapoor Good Luck Jerry Promotion Photoshoot Pictures

பல கேங்ஸ்டர் மத்தியில் தனது குடும்பத்தினருடன் ஜான்வி கபூர் போராடும் கதைக் களத்திற்கு நடுவே நிறைய காமெடி மற்றும் குடும்ப எமோஷனல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை இந்தியில் லைக்கா நிறுவத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராய் தயாரித்துள்ளார்.

இந்த படம் போக, வருண் தவானுக்கு ஜோடியாக நித்தேஷ் திவாரி இயக்கும் "பவால்" படத்திலும் ஜான்வி நடித்துள்ளார். ஜான்வி கபூரின் நடிப்பில் அவரது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் மிலி படமும் தற்போது தயாராகி வருகிறது.

Janhvi Kapoor Good Luck Jerry Promotion Photoshoot Pictures

மேலும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | தனுஷ் நடித்த 'THE GRAY MAN' படத்தின் சிறப்பு திரையிடல்.. வேட்டி சட்டையில் அசத்திய தனுஷ்!

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor Good Luck Jerry Promotion Photoshoot Pictures

People looking for online information on Good Luck Jerry, Good Luck Jerry Movie updates, Janhvi Kapoor will find this news story useful.