www.garudabazaar.com

"காசேதான் கடவுளடா".. வெளியானது அஜித் நடிக்கும் துணிவு 2வது சிங்கிள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

Ajith Kumar Second Single Kasedhan Kadavulada Released

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதற்கு முன்பாக வலிமை திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. H.வினோத் இயக்கி இருந்த இந்த திரைபடத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்திற்கு மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் நடிகர் அஜித் குமார், இயக்குனர் H. வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைகின்றனர்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் முதல் சிங்கிளான சில்லா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 'காசேதான் கடவுளடா' எனும் இரண்டாம் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. வைசாக் இந்த பாடலை எழுதி, பாடியிருக்கிறார். அவருடன் மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோரும் இப்பாடலை பாடியுள்ளனர். 3.14 நிமிடங்கள் ஓடும் இந்தப்பாடல் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Second Single Kasedhan Kadavulada Released

People looking for online information on Ajithkumar, Second Single, Thunivu will find this news story useful.