www.garudabazaar.com

ஜனனி - விக்ரமன் வழக்கில் அசீமின் பரபர வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss 6 Tamil Vikraman Janany Case inquiry In Court Task

Also Read | "2 வாரமா கேக்குறேன்ல".. ஃபோன் நம்பர் கேட்டு அடம்பிடித்த ராபர்ட் .. ரச்சிதா சொன்ன பதில்.. bigg boss 6 Tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss 6 Tamil Vikraman Janany Case inquiry In Court Task

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

BiggBoss 6 Tamil Vikraman Janany Case inquiry In Court Task

இந்நிலையில், பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் விக்ரமன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜனனி. இந்த வழக்கில் விக்ரமனுக்காக குயின்சியும், ஜனனிக்காக அசீமும் வாதாடுகிறார்கள். மணிகண்டா நீதிபதியாக செயல்படுகிறார். அப்போது, "உங்கள் தமிழில் பிரச்சனை போல என்று விக்ரமன் அவர்கள் ஜனனி அவர்களை சுட்டிக்காட்டியது மிகுந்த மன வேதனையை அளித்தது" என்கிறார் அசீம். இதனை கேட்ட விக்ரமனும் குயின்சியும் மொழி என்றுதான் குறிப்பிட்டதாக கூறுகின்றனர்.

குயின்சி,"உங்கள் மொழியில் சிரமம் உள்ளதாகவே கூறியிருக்கிறார்" என்கிறார். தொடர்ந்து பேசும் விக்ரமன்,"அவங்க தமிழ்ல எனக்கு பிரச்சனையே கிடையாது. அந்த செந்தமிழ் பேசுறது எனக்குமே சிரமம் தான்" என்கிறார். ஜனனி பேசுகையில்,"அவர் உங்களுடைய தமிழ் என்று கூறியது எனக்கு வருத்தம் தான்" என்கிறார்.

BiggBoss 6 Tamil Vikraman Janany Case inquiry In Court Task

இதனிடையே, "உங்கள் தமிழ் மீது என்று கூறமுடியாது ஏனென்றால் டாஸ்க்கை பற்றி பேசிக்கொண்டிருக்கோம்" என குயின்சி சொல்ல, "அவங்க தமிழ் கேஸின்போது தூங்கிட்டாங்கன்னு நெனைக்கிறேன்" என்கிறார் அசீம். தொடர்ந்து வாதாடிய குயின்சி,"எத்தனை முறை கத்தி கூறினாலும் அது டாஸ்க் தான்" என்கிறார். இப்படி அனல் பறக்கும் வாதத்தோடு நடைபெற இருக்கிறது இன்றைய பிக்பாஸ்.

 

Also Read | "அவரு மன்னிப்பு கேட்டே ஆகணும்".. ADK மீது அசீம் தொடுத்த வழக்கு.. Judge ராமின் பரபர தீர்ப்பு!!..

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss 6 Tamil Vikraman Janany Case inquiry In Court Task

People looking for online information on Bigg Boss 6 Court Task, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janany, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.