ஜனனி எதுக்காக உடைந்து அழுதார்? அப்படி என்னதான் அசீம் சொன்னாரு? போட்டு உடைத்த ஷிவின்.! bigg boss 6
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக, பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா இருக்கின்றனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் உள்ளனர்.
இதில்தான் ஏலியனாக வேடமிட்ட தனலட்சுமிக்கும் பழங்குடி ஷிவினுக்கும் சண்டை வந்தது. சண்டைக்கு பின் ஷிவினிடம் தனாவும், தனாவிடம் ஷிவினும் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். ஆனால் ஷிவின் தனா பேசியதை சீரியஸாக எடுத்துக்கொண்டு அவரை திரும்பவும் ஹர்ட் பண்ணி பேசிவிட்டதாக குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி மிகவும் அழுதார். அவரை சமாதானப்படுத்திய தனலட்சுமி, “சரி அழாத.. நம்மள 20 ஆயிரம் மக்கள் தேர்ந்தெடுத்துருக்காங்க.. நான் எதுவும் சீரியஸாக எடுத்துக்கல. டாஸ்க் வேற.. நம்ம ரிலேஷன் ஷிப் வேற.. போய் டாஸ்க் விளையாடு” என கூறினார்.
இதேபோல் அசீம்க்கும் ஜனனிக்குமான பேச்சில், ‘லூசு மாதிரி பேசாதீங்க’ என கை காட்டி பேசிய ஜனனியிடம் அசீம், “உன் வயசு என்ன என் வயசு என்ன? எப்படி என்னை கைகாட்டி பேசுற? லூசுங்குற?” என ஆத்திரத்துடன் கத்தினார். இதன் பின்னணி இதுதான். பழங்குடியின அணியினர் அனைவரிடத்திலும் தனது ஆலோசனைகளை யாருமே ஃபாலோ பண்ணவில்லை என அசீம் கொதிக்கிறார். அதற்கு விக்ரமனும் கதிரும், “அசீம்.. நீங்க சொல்றதை யார் கேக்காமல் இல்லை? ஆனால் அனைவரின் முடிவையும் சேர்த்துதான் முடிவெடுக்க முடியும்” என கூறினர்.
ஷிவினோ, “நான் டீம் டிஸ்கஷனுக்கு ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்கள் தனிப்பட்ட முடிவை மட்டும் ஏற்க முடியாது” என கூறுகிறார். இதைத் தொடர்ந்து டீம் டிஸ்கஷனுக்காக ஜனனியை அழைத்தனர். அதற்குள் கோபப்பட்ட அசீம், “நீங்க பேசுங்க.. நான் பேசல” என கூற, இவ்வளவு நேரம் கத்திவிட்டு, இப்போது பேச விருப்பம் இல்லை என சொன்னால் என்ன அர்த்தம் என விக்ரமனும், ஷிவினும் கேட்க தொடங்கினர். இறுதியில் அசீம் யாரையோ லூசு என சொல்லிவிட, அசீம் யாரைத்தான் நேரடியாக சொல்கிறார் என அனைவர் முன்னிலையிலும் சொல்லுங்கள் என அனைவருமே கேட்க தொடங்கிவிட்டனர்.
அப்போது அசீம் என்ன சொன்னார் என்கிற உண்மையை உடைத்த ஷிவின், “ஜனனியை உள்ளே அனுப்பினால், அவள் உள்ளே போயிட்டு அமுதவாணனுக்காகவும் தனலட்சுமிக்காகவும் கேம் ஆடுவாள். அவளுக்கு தூங்குவதுதான் முக்கியம். எனவே அவளை 2,3 நாட்களுக்கு அனுப்ப வேண்டாம். கடைசியாக அனுப்ப வேண்டாம்.” என அசீம் சொன்னதாக சொல்கிறார். இதை கேட்ட ஜனனி உடைந்து அழுதே விட்டார். இதை கேட்ட விக்ரமன், “எதுக்காக அந்த பொண்ணு இல்லாதப்ப அவள பத்தி பேசணும்” என கொந்தளித்தார்.
அப்போது அழத் தொடங்கிய ஜனனி, “அப்படியானால் நான் ஏன் இந்த அணிக்காக ஆடியிருக்க போகிறேன்” என அசீமின் குற்றச்சாட்டுக்கு எதிராக மிகவும் உடைந்து போகிறார். அந்த சமயத்தில், “இதெல்லாம் அழறதுக்கு வொர்த்தே இல்லை... அழாத என மைனாவும் தனாவும் ஜனனியை சமாதானப்படுத்த, குயின்ஸியும், “மத்தவங்கள கஷ்டப்படுத்துறது எப்படினு யோசிக்குறவங்க கிட்டலாம் நீ இதை பண்ணாத.. ஸ்ட்ராங்கா இரு” என சமாதானப்படுத்த, விக்ரமோ, “அப்படியே ஜனனி அப்படி விளையாட தெரியாமல் விளையாடுவதாக அசீம் நினைத்தால், தோற்பது ஜனனிதானே இது தனி போட்டியாளரின் கேம்.. அவருக்கு என்ன?” என சொல்லிவிட்டார். கடைசியில் அசீமோ, “யார் என்ன சொன்னால் என்ன? என் கேமை என் இஷ்டப்படிதான் நான் ஆடுவேன்” என கூற, “நீங்கள் ஆடுங்க அசீம்” என ஷிவினும் கூறிவிட்டார்.