பிரபல சினிமா ஃபோட்டோகிராபர் ஸ்டில்ஸ் சிவா சாலை விபத்தில் மரணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 03, 2019 08:30 AM
தமிழ் திரையுலகில் பிரபல ஸ்டில் ஃபோட்டோகிராபராக அறியப்படுபவர் ஸ்டில்ஸ் சிவா . இவர் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் ஆஸ்தான போட்டோகிராபராக அறியப்படுகிறார்.

இந்நிலையல் ஸ்டில்ஸ் சிவா நேற்று (செப்டம்பர் 2) மாலை இயக்குநர் ராஜ் கபூரின் தொலைக்காட்சித் தொடரின் ஒளிப்பதிவை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
அவரது உடல் நேற்றைய தகவலின்படி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : Still Shiva, Photographer