ஆபீஸை தெறிக்கவிட்ட ஐடி ஊழியர்கள் - தளபதியின் வெறித்தனம் பாடலுக்கு வேற லெவல் டான்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ பாடலுக்கு ஐடி ஊழியர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IT employees dances for Vijay's Verithanam song from Bigil

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனிடையே, சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில், ஊழியர்கள் அனைவரும் இணைந்து பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள தளபதி விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய ‘வெறித்தனம்’ பாடலுக்கு வெறித்தனமாக டான்ஸ் ஆடியுள்ளனர். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  வரும் அக்.25ம் தேதி ரிலீசாக இருப்பதையொட்டி ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.