Reliable Software
www.garudabazaar.com

தளபதி 65 படத்தின் வில்லன் இவரா?.... வைரலான மாஸ் தகவல்... உண்மையை போட்டு உடைத்த நடிகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீங்கள் ஒரு உண்மையான தளபதி ரசிகர் என்றால் டிசம்பர் 2020 ஐ மறக்க முடியாது, ஆம் அன்று தான்  தளபதி விஜய் முதல் முறையாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, ஒரு மரண மாஸ் வீடியோவுடன் வந்தது. கடந்த மாதம் DOP மனோஜ் பரமஹம்சா தான் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறும்போது, தளபதி 65 ஒரு பான்-இந்தியன் படமாக இருக்கும் என்று கூறினார்.

is vidyut jammwal a part of thlapathy 65 தளபதி 65 படத்தின் வில்லன் இவரா?

இதனையடுத்து விஜய்யின் லுக் டெஸ்ட் சன் ஸ்டுடியோவில் பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது.  தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தில் அவருக்கு ஜோடியாக புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே  நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் முதன்முறையாக இணையும் இந்த் காம்போ நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தளபதி விஜய் நடிக்கப்போகும் 65-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜமால் இணைய இருப்பதாக செய்திகள் வைரலாகி வருகிறது. இதற்கு தற்போது அவர் பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது "நானும் காத்திருக்கிறேன். அதை  செய்வதற்கும் விரும்புகிறேன். ஆனால் இந்த செய்தி பொய்யானது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

is vidyut jammwal a part of thlapathy 65 தளபதி 65 படத்தின் வில்லன் இவரா?

People looking for online information on Thalapathy, Vidyut jamal will find this news story useful.