Reliable Software
www.garudabazaar.com

தளபதி 65-ல் இணைந்த பிரபல டிக்டாக் நடிகை... அவரே வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீங்கள் ஒரு உண்மையான தளபதி ரசிகர் என்றால் டிசம்பர் 2020 ஐ மறக்க முடியாது, ஆம் அன்று தான்  தளபதி விஜய் முதல் முறையாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, ஒரு மரண மாஸ் வீடியோவுடன் வந்தது.

This young actress joins Thalapathy vijay 65தளபதி 65-ல் இணைந்த டிக்டாக் நடிகை

கடந்த மாதம் DOP மனோஜ் பரமஹம்சா தான் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறும்போது, தளபதி 65 ஒரு பான்-இந்தியன் படமாக இருக்கும் என்று கூறினார். இதனையடுத்து விஜய்யின் லுக் டெஸ்ட் சன் ஸ்டுடியோவில் பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது.  தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தில் அவருக்கு ஜோடியாக புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே  நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் முதன்முறையாக இணையும் இந்த் காம்போ நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

This young actress joins Thalapathy vijay 65தளபதி 65-ல் இணைந்த டிக்டாக் நடிகை

இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கப்போகும் 65-வது படத்தின் பூஜை இன்று பிரமாண்டமாக துவங்கியுள்ளது. நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன்  மற்றும் பட குழுவினர் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது முக்கியமான இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகையான அபர்ணா தாஸ் இந்த படத்தில்  இணைந்துள்ளார். இவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு, ஆரம்பத்தில் அபர்ணா தாஸ்  மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தவர். MBA வரை படித்திருக்கிறார். இந்நிலையில் பிரபல வீடியோ தளமான டிக்டாக்கில் பாடல்களுக்கு வாயசைத்து அவர் வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலாகின. இதைப்பார்த்த மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இவரை தனது படத்தில் நடிக்க வைத்தார்.. அதன் பின்பு மனோகரம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை தர தற்போது விஜய் நடிக்கும் தளபதி 65-ல் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 65-ல் இணைந்த பிரபல டிக்டாக் நடிகை... அவரே வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ...! வீடியோ

Tags : Vijay, Nelson

தொடர்புடைய இணைப்புகள்

This young actress joins Thalapathy vijay 65தளபதி 65-ல் இணைந்த டிக்டாக் நடிகை

People looking for online information on Nelson, Vijay will find this news story useful.