IndParty
www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைய போகும் நடிகை?... வைரலாகும் தகவல்... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

is this contestant to give re entry in biggboss

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது சனம் மீண்டும் பிக்பாஸ்  போட்டியில் ரீ என்ட்ரி கொடுக்க போகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணங்களாக சிலவற்றை முன்வைக்கின்றனர் நெட்டிசன்கள். அதாவது இன்னும் அவரது போன் Not Reachableல் தான் இருக்கிறதாம். இன்னும் அவரது நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ கூட அவரை சந்திக்கவில்லையாம். மேலும் அவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் கூட ரீச் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாகவே பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேறிய பின்னர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவிடுவது வழக்கம். ஆனால் சனம் இன்னும் அப்படி எதுவும் செய்யவில்லை. இது  போன்ற சில காரணங்களை முன்வைத்து சனம் நிச்சயம் பிக்பாஸ்போட்டியில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைய போகும் நடிகை?... வைரலாகும் தகவல்... செம குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

is this contestant to give re entry in biggboss

People looking for online information on Biggboss4tamil, Sanam will find this news story useful.