பிக்பாஸிலிருந்து சனம் வெளியேறியது பற்றி சுரேஷ் வெளியிட்ட பதிவு... " சனம் நீ நிஜமாவே.."
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இந்நிலையில் இதுபற்றி பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷ் கூறும்போது, "சனம் நீ ஒரு ரியல் போராளி.வெற்றியாளர். வா மகளே வா. வெற்றி வாகை சூடி கொண்டு வா. பாலாவையே மாற்றிவிட்டார் சனம். ஒரு ராணியை போல அவர் நடந்து சென்றார். சனத்தின் எவிக்ஷன் நியாயமே இல்லை. வெட்கம்" என்று கூறியுள்ளார்.
பிக்பாஸிலிருந்து சனம் வெளியேறியது பற்றி சுரேஷ் வெளியிட்ட பதிவு... " சனம் நீ நிஜமாவே.." வீடியோ