www.garudabazaar.com

Big Breaking: துணிவை தொடர்ந்து H.வினோத் இயக்க போகும் முன்னணி ஹீரோ இவரா..? மாஸ் அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை தொடங்கி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வரை பல படங்களில் நடித்துள்ள தனுஷ், தேசிய விருது பெற்ற நடிகர்.

Is this actor starring H Vinoth next movie deets

வெற்றிமாறனின் இயக்கத்திலான பொல்லாதவன், ஆடுகள, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களும், செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களும் தனுஷின் திரைவாழ்வில் முக்கிய படங்களாக அமைந்தன. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேட்பன் மில்லர், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இதேபோல் சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குநர்  H.வினோத், சமூக குற்ற பின்னணிகள் தொடர்பான கதைகளை வலுவான திரைக்கதைகள் மூலம் படமாக்க கூடிய இயக்குநராக நம்பிக்கையை பெற்றவர். கார்த்தி நடிப்பில் தீரன், அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை இயக்கிய  H.வினோத், அடுத்ததாக அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில்தான் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் H வினோத் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Is this actor starring H Vinoth next movie deets

People looking for online information on Ajith Kumar, Dhanush, H Vinoth, Thunivu will find this news story useful.