www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி சீரியலில் இணைந்த Bigg Boss தாமரை செல்வி..! ரசிகர்கள் வாழ்த்து..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை தாண்டி அடுத்த அத்தியாயத்துக்கு சென்றுள்ளது.

bigg boss fame thamarai selvi joins bharathi kannamma

இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், லட்சுமி கண்ணம்மாவுடனும், ஹேமா வளர்ப்பு குழந்தை என்கிற பெயரில் பாரதியிடமும் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பாரதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றும், அதனால் குழந்தைகள் பாரதியுடைய குழந்தைகள் அல்ல என்றும் வெண்பா பாரதியை குழப்ப, பாரதியும் சந்தேகத்தால் 10 ஆண்டுகள் கண்ணம்மாவை பிரிந்து வாழ்ந்தார்.

ஆனாலும் இருவரும் ஒன்றாக ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்தனர். இதனிடையே ஹேமாவின் பெற்றோர் யாரென்கிற தேடுதலால் அனைத்துமே முடிவுக்கு வந்தது. கண்ணம்மாதான் தான் ஹேமாவின் அம்மா என சொல்ல, பாரதியோ, இன்னொரு பக்கம் இந்த பிரச்சனைகளால் அனைவரும் சொல்வது போல் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்து, சாம்பிள்களை கொடுத்து, ரிசல்டுடன் வந்துவிட, அனைவர் முன்னிலையிலும் உண்மையை சொல்லி, அழுத பாரதி, கண்ணம்மாவிடம் மன்னிப்பும் கேட்டார்.

இதனிடையே அங்கும் குட்டை குழப்ப பார்த்த வெண்பாவுக்கு எதிராக அங்கேயே அடுத்தடுத்த சாட்சியங்கள் வந்து ஷாக் கொடுத்தனர். பாரதியை டி.என்.ஏ விஷயத்தில் ஏமாற்றி, கண்ணம்மாவை கொலை செய்ய பார்த்தது வரை அத்தனை உண்மைகளையும் அடுத்தடுத்த கேரக்டர்கள் சொல்ல, வெண்பாவை அடிக்கவே பாய்ந்தார் பாரதி. அதற்குள் வெண்பாவின் அம்மா போன் பண்ணியதால், போலீஸ் வந்து வெண்பாவை கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனிடையே குடும்பத்துடன் சேர்ந்து வாழ கண்ணம்மாவிடம் கோரிய பாரதியிடம் கண்ணம்மாவோ, அவரை மன்னிக்காமல், கோபத்திலும், வருத்தத்திலும் தனக்கு தன் பிள்ளைகள் போதும் என ஹேமா & லெட்சுமி இருவருடனும், தன் அப்பாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு போகிறார். அங்குதான் பல சொந்தங்களை சந்திக்கிறார்கள் இவர்கள். அப்போது கண்ணம்மாவுடன் செல்லும் அவரது அப்பா, தங்குவதற்கு வீடு பார்க்கும்போது, பிக்பாஸ் தாமரை எண்ட்ரி கொடுக்கிறார்.

இவர் தாமரை என்கிற பெயரிலேயே இந்த சீரியலில் வருகிறார். பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தாமரைசெல்வி என்கிற தாமரை அடிப்படையில் மேடை நாடக கலைஞராக இருந்து, தற்போது சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss fame thamarai selvi joins bharathi kannamma

People looking for online information on பாரதி கண்ணம்மா, Bharathi Kannamma, Bharathi Kannamma Serial Today, Bharathi kannamma today episode, Bigg boss, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss New Promo will find this news story useful.