www.garudabazaar.com

வாரிசும் வேணும்.. துணிவும் வேணும்.. இரண்டு படங்களின் உரிமத்தையும் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு & வாரிசு படங்களின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Phars Films Bagged Varisu Thunivu Theatrical Rights

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Phars Films Bagged Varisu Thunivu Theatrical Rights

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸாகும் துணிவு படத்தின் மத்திய கிழக்கு நாடுகளின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நிறுவனம் துணிவு மற்றும் வாரிசு படங்களின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது திரைத்துறையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags : Varisu, Thunivu

தொடர்புடைய இணைப்புகள்

Phars Films Bagged Varisu Thunivu Theatrical Rights

People looking for online information on Thunivu, Varisu will find this news story useful.