www.garudabazaar.com

படத்திற்காக திருநங்கை வேடம்.. பிரபல நடிகர் பகிர்ந்த மேக்கப் வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Nawazuddin Siddiqui As Transgender Character For Haddi

பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக், 1999-ம் ஆண்டு "சரிபாரோஷ்" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். தன்னுடைய அபாரமான திரை மொழியின் காரணமாக பல லட்சக்கணக்கான ரசிகர்ளையும் இவர் பெற்றிருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நவாஸுதீன் சித்திக். அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த இவருடைய கேரக்டர் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது, ஹடி (Haddi) எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடிக்கும் நவாஸுதீன் சித்திக் இதற்காக சிறப்பு மேக்கப்களை அணிந்து நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனரான அக்ஷத் அஜய் ஷர்மா என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில், இந்த படத்திற்காக மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை நவாஸுதீன் சித்திக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், அந்த வீடியோவில் வெள்ளை நிற குர்தா அணிந்திருக்கும் அவருக்கு நிபுணர் மேக்கப் போடுகிறார். இறுதியில் ஹடி திரைப்படத்தில் ஸ்டில் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.

முன்னதாக இந்த படத்திற்காக திருநங்கைகளுடன் நடித்து வருவதாகவும் இது மறக்க முடியாத அனுபவம் என்றும் நவாஸுதீன் தெரிவித்திருந்தார். இந்த ஹடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியானது. அது முதலே நவாஸுதீன் சித்திக்கின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஹடி திரைப்படத்திற்காக நவாஸுதீன் சித்திக் வெளியிட்டுள்ள மேக்கப் வீடியோ ரசிகர்களை பெரிதும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Nawazuddin Siddiqui As Transgender Character For Haddi

People looking for online information on Haddi, Nawazuddin Siddiqui, Transgender will find this news story useful.