www.garudabazaar.com

எதே.. குயின்சி டீம் மணிகண்டாவுக்கு வேலை பாக்குதா?.. ஷாக் ஆன ரசிகர்கள்.! Bigg Boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Is Queency Talk about her PR Team to Manigandan BB6 Tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Is Queency Talk about her PR Team to Manigandan BB6 Tamil

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

Is Queency Talk about her PR Team to Manigandan BB6 Tamil

இதனிடையே, இந்த வாரத்துக்கான பிக்பாஸ் வீட்டு தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கால்பந்து போட்டியின் மூலம் தலைவர் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இதில் போட்டியிட்ட தனலட்சுமி இதுகுறித்து கோர்ட் டாஸ்க்கில் வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க, குயின்சி - மணிகண்டா இடையேயான உரையாடல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Is Queency Talk about her PR Team to Manigandan BB6 Tamil

பிக்பாஸ் வீட்டுக்குள் கார்டன் பகுதியில் குயின்சி, ஆயிஷா, மைனா மற்றும் மணிகண்டா ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, சிரித்தபடியே "போயிடுறேன் நான். அடுத்த வாரம் போய்டுவேன்" என்கிறார் மணிகண்டா. இதனைக்கேட்ட குயின்சி,"இதைச் சொல்லும்போது உனக்கே சிரிப்பு வரலையா? என் Team உனக்கு தான் வேலை பார்த்துட்டு இருக்கும்" என்கிறார் ஜாலியாக.

தொடர்புடைய இணைப்புகள்

Is Queency Talk about her PR Team to Manigandan BB6 Tamil

People looking for online information on Biggboss6Tamil, Manikanta, Queency will find this news story useful.