www.garudabazaar.com

திருமணம் எப்போ? எங்க? Pre Wedding Meet -ல் அறிவித்த கௌதம் கார்த்திக் & மஞ்சிமா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Gautam Karthik Manjima Mohan Gautam Karthik Marriage Date

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்

Gautam Karthik Manjima Mohan Gautam Karthik Marriage Date

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

‌‍ மேலும் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து எடுத்த சில போட்டோ ஷூட் புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

Gautam Karthik Manjima Mohan Gautam Karthik Marriage Date

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் & நடிகர் கௌதம் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தங்களது திருமணம் சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக நடைபெறும் என்று கூறினர். மேலும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திருமணம் எப்போ? எங்க? PRE WEDDING MEET -ல் அறிவித்த கௌதம் கார்த்திக் & மஞ்சிமா.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautam Karthik Manjima Mohan Gautam Karthik Marriage Date

People looking for online information on Gautham Karthik, Manjima Mohan, Manjima Mohan Marriage Date will find this news story useful.