PS1 : "நாவல் படிச்சாதான் பொன்னியின் செல்வன் புரியுமா?" - இயக்குநர் மணிரத்னம் Exclusive பதில்.!
முகப்பு > சினிமா செய்திகள்அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக பன்மொழிகளில் வெளியிட்டுள்ளது.
சுமார் 50 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் சாத்தியப்படாமல் இருந்த, பொன்னியின் செல்வன் நாவலை திரையில் கொண்டுவந்துள்ள இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வம் நாவலை வாசிக்காதவர்களுக்கானதா? நாவல் வாசகர்களுக்கானதா? யாருக்கு நன்றாக புரியும் என்பது குறித்த கேள்விக்கு பிஹைட்வுட்ஸின் பிரத்தியேக நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.
அதில், “நான் ஒரு கதை சொல்ல வந்திருக்கேன், கல்கி சார் நாவலில் சொன்ன கதையைம் நான் சினிமாவில் சொல்ல வந்திருக்கேன், இது பாக்குறவங்க, புத்தகத்தை படித்திருந்தாலும் சரி, படிக்கவில்லை என்றாலும் சரி, புரியணும். அதுதான் என்னுடைய வேலை. ஆக, கதை சொன்ன விதத்தில் எல்லாமே புரியுற மாதிரிதான் எடுத்திருக்கிறோம். கூடுதல் ஹோம் வொர்க் பண்ணிவிட்டு வர வேண்டும் என்றில்லை.
ஆனால் ஹோம் வொர்க் பண்ணுவதில் என்ன அட்வாண்டேஜ் என்றால், இதுமட்டுமில்லாமல், புத்தகம் & படத்தை தாண்டி சோழநாட்டை பற்றியும், அந்த அரசர்கள் பற்றியும் ஒரு பிடிப்பு கிடைக்கும். கல்கி பண்ணியதிலேயே பெரிய விஷயம், ஒரு புனைவுக்கதையில் அத்தனை விவரங்கள், வரலாறு, வாழ்க்கை முறை ஆகியவற்றை வைத்துள்ளார். அதையும் படத்தில் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறோம்.
இந்த படம் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஒரு அறிமுகம் தான். நாவலை படித்துவிட்டு படம் பார்க்க வேண்டும் என்பதை விட, படத்தை பார்த்துவிட்டும் நாவலை படித்து சோழர்கள், அந்த கலாச்சாரம் , வாழ்வியலை புரிந்துகொள்ள முயலலாம். நான் பள்ளி காலத்தில் இந்த நாவலை முதலில் படித்தேன். அனைத்து கேரக்டர்களும் நம்மை கவர்ந்துவிடும். ” என்றார் இயக்குநர் மணிரத்னம்.
PS1 : "நாவல் படிச்சாதான் பொன்னியின் செல்வன் புரியுமா?" - இயக்குநர் மணிரத்னம் EXCLUSIVE பதில்.! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Trisha Crown Miss Chennai On Same Date Of Ponniyin Selvan Release
- Maniratnam Faced Difficulties Making Ponniyin Selvan Exclusive
- Trisha Watched Ponniyin Selvan Movie With Karthi Vikram Jayram
- Ponniyin Selvan Novel Dialogue Between Nandini Kundavai Fans
- Karthik Subbaraj Tweet About Naane Varuven Movie
- How Ponniyin Selvan Differs With Bahubali Maniratnam Exclusive
- Nandini Kundavai Poonguzgali Fans Army Ponniyin Selvan Part 1
- Jayam Ravi Watching Ponniyin Selvan PS1 With His Wife
- Karthi Sardar Movie Teaser Released By Actor Suriya
- Prince Hey Jessica Song Full Lyrics Poster SivaKarthikeyan
- Ponniyin Selvan Trailer Song Patanjali Natesa Navagam
- Sarathkumar Over Love Scens With Aishwarya Rai Ponniyin Selvan
தொடர்புடைய இணைப்புகள்
- "ப்பா... அவரு பயங்கரமா இருந்தாரு" 😍 JAYAM RAVI-ஐ கொண்டாடிய மனைவி Aarti
- "Naane Varuvean படத்த கிண்டல் பண்றேன்னு"... உண்மையை உடைத்த Parthiban 🔥 Ponniyin Selvan 😍 PS 1 FDFS
- "തൃഷയും ഐശ്വര്യയും Ponniyin Selvan ഉപേക്ഷിക്കുമെന്നാ ഞാൻ കരുതിയെ"| Interview With English Subtitles
- പൊന്നി നദിയുടെ പുത്രൻ പൊന്നിയിൻ സെൽവനായതെങ്ങനെ?
- "PS-1 பார்க்கப் போகும் முன் இத தெரிஞ்சிக்கோங்க!" பகீர் உண்மைகள் உடைக்கும் பேட்டி
- വിക്രമോ കാർത്തിയോ ? | Ponniyin Selvan Public Review | PS 1 Review | Maniratnam | Karthi | Trisha
- SECRET Chola Cave 😱 AISHWARYA RAI & KARTHI Meeting Cave Live Visit Interview | PS 1
- മമ്മൂക്ക എന്നെ പിടിച്ചിരുത്തി മട്ടൻ കഴിപ്പിച്ചു 😅😅| Sarath Kumar | Interview
- പണ്ടാരം! അവൻ്റെ ഒരു Camera😂 Suresh Gopi-യെ ട്രോളി Jayaram-ൻ്റെ Thug 😂
- தன் காதல் இளவரசரை Sight அடிக்க வந்த மனைவி Aarti 💞 Jayam Ravi 😍 PS 1 FDFS
- என்னோட Real இளவரசியே பாத்து வாங்க 😍 மனைவி Aarti-ஐ பத்திரமா கூட்டிட்டு போன Jayam Ravi ❤️ PS 1
- Aayirathil Oruvan To Ponniyin Selvan 😍 சோழனின் பயணம் தொடரும் 🔥 PS 1 FDFS