Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

6 விதமான லுக்கில் கார்த்தி.. வெளியான 'சர்தார்' படத்தின் பக்கா மாஸ் டீஸர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Karthi Sardar Movie Teaser Released by Actor Suriya

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விருமன்'. இந்த விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Karthi Sardar Movie Teaser Released by Actor Suriya

சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Karthi Sardar Movie Teaser Released by Actor Suriya

இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

Karthi Sardar Movie Teaser Released by Actor Suriya

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சர்தார் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீஸரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

டீஸரில் கிராமத்து பெண்ணாக ராஜிஷா விஜயன் தோன்றியுள்ளார். ராஷி கண்ணா வழக்கறிஞராக தோன்றியுள்ளார்.  சர்தார், கார்த்தியின் உளவு  கோட் நேம் என டீஸரில் கூறப்படுகிறது. கார்த்தி உளவாளியாக ஆறு வித்தியாசமான லுக்கில் இந்த டீஸரில் தோன்றியுள்ளார்.

6 விதமான லுக்கில் கார்த்தி.. வெளியான 'சர்தார்' படத்தின் பக்கா மாஸ் டீஸர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Sardar Movie Teaser Released by Actor Suriya

People looking for online information on Karthi, Sardar, Suriya will find this news story useful.