www.garudabazaar.com

போடு.! BIGG BOSS -ல வரப்போறாங்களா அமலா ஷாஜி.? ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகும் Post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2K கிட்ஸ்களின் பேவரட்டாக திகழும் மலையாள இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி.

Is actress Amala Shaji enters into Bigg Boss trending

Also Read | எல்லாம் கண்ணனால.. பளார் விட்ட மூர்த்தி..!! பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ்..   

இவர் சோசியல் மீடியாவில் நடிகைகளுக்கு கூட இல்லாத அளவுக்கு அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார்,  அனைவருக்கும் இவருடைய கியூட்னஸ், ரியாக்‌ஷன் பிடித்து போனது. டிக் டாக் மூலம் மத்தியில் பிரபலமான அமலா ஷாஜி டிக் டாக் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட, தற்போது இவரை மில்லியன் கணக்கானோர் பாலோ செய்கின்றனர்.

இவர் தம்முடைய சகோதரியுடன் சேர்ந்து ரீல்ஸ், சோலோ டான்ஸ், ரீகிரியேஷன், கடை விளம்பரங்கள் என சகல வீடியோக்களையும் வெளியிடுகிறார். குறிப்பாக இதென்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்பது போல், அமலா ஷாஜியின் பிரபல வசனமான ‘அழுக ஒன்னும் வேணாம் ஓகே’ என்பதுதான் இவருடைய ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.

கேரளாவை சேர்ந்த இவருக்கு, கேரளா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் உள்ளனர். ஆம், இவருக்கு தமிழ் ரசிகர்களும்  எக்கச்சக்கம் தான். 20 வயதே ஆன  அமலா ஷாஜிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறார்கள் என்றால் அதற்கு அமலா ஷாஜியின் க்யூட்டான வீடியோக்கள் தான் காரணம் என்கின்றனர் அவரை இன்ஸ்டாவில் பின் தொடரும் ரசிகர்கள். முன்னதாக நடிகை அமலா ஷாஜி, லோகேஷ் கனகராஜ் இயகத்தில் விஜய், த்ரிஷா நடிக்கும் தளபதி விஜய்யின் 67வது படமான லியோ படத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்த பேச்சுகள் அப்போது ட்ரெண்ட் ஆகின. அதற்குத் தகுந்தாற்போல், அவர் காஷ்மீருக்கு சென்றதும், திரும்பியதுமான புகைப்படங்கள் வைரலாகின.

Is actress Amala Shaji enters into Bigg Boss trending

இந்நிலையில் நடிகை மற்றும் இன்ஸ்டா பிரபலமான அமலா ஷாஜி, மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சி டீம் வெளியிட்டுள்ள போஸ்டரில், 3.6 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள ஒரு இன்ஸ்டா பிரபலம் மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனுக்கு வரப்போவதாக தெரிவித்துள்ளதை அடுத்து, அமலா ஷாஜியின் ரசிகர்கள் அது அமலா ஷாஜி தான் எனக்கூறி, குதூகலித்து வருகின்றனர்.

Also Read | ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநருக்கு ரூ.1 கோடி.. நேரில் கௌரவித்த தமிழக முதல்வர்.

தொடர்புடைய இணைப்புகள்

Is actress Amala Shaji enters into Bigg Boss trending

People looking for online information on Amala shaji, Bigg boss, Bigg Boss Malayalam 5, Leo will find this news story useful.