தினேஷ் ஹீரோவாக நடிக்கும் 'நானும் சிங்கிள் தான்' - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அட்டகத்தி','குக்கூ','விசாரணை' என ஹீரோவாக மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் தினேஷ். இவர் தற்போது 'நானும் சிங்கிள் தான்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Dinesh to act in Comedy Movie named Naanum Single Dhan

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைக்க, டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை த்ரீ இஸ் ஏ கம்பெனி என்ற நிறுவனம் மற்றும் ஜெயக்குமார் , புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.