Breaking : 'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' - ரிலீஸ் தொடர்பான செம அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக நடிக்க, கரிஷ்மா, ஆக்ருதி , மீனல் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனராம்.
விறுவிறுப்பாக உருவாகி வந்த இந்த படம் குறித்து எங்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்தை தமிழ் டிஜிட்டல் ரைட்ஸ் தவிர்த்து இந்த படத்தின் மொத்த விநியோக உரிமையையும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Santhosh P Jayakumar | Arya - Sayyesha wedding Celebrities reaction - Slideshow
- Santhosh P Jayakumar | Junga lady Sayyeshaa birthday - Wishes pour in! - Slideshow
- Ghajinikanth Music Review
- IAMK Part 2 Scenes | Santhosh P Jayakumar
- "Blue Sattai Maran Rejected Doing Dubbing..."- Santhosh P.Jayakumar | Iruttu Araiyil Murattu Kuththu