www.garudabazaar.com

எல்லாரும் 'கார்னர்' பண்றாங்க... என்ன சொல்றீங்க 'பாலாஜி' நெஜமாவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் வாரம் முழுவதும் ஆக்டிவாக இருந்தவர்கள் யார் என போட்டியாளர்கள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து கேப்டன் பதவிக்கு தங்களுக்கு பிடித்தவர்களை நாமினேட் செய்தனர். இதில் ஆரி, நிஷா, சோம் மூவரும் கேப்டன் பதவிக்கு போட்டி போட தேர்வு செய்யப்பட்டனர். இதில் பாலாஜிக்கு ஷிவானி, சம்யுக்தா இருவர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

I Have been cornered in this House, Says Balaji Murugadoss

இதையடுத்து சம்யுக்தா, பாலாஜி, சுச்சி, ஆஜீத் ஆகிய நான்கு பேரும் வெளியில்  வந்தனர். அப்போது சம்யுக்தா ஆரி குறித்து ஏதோ சொல்ல பதிலுக்கு பாலாஜி என்ன எல்லாரும் சேர்ந்து கார்னர் பண்றாங்க என அவரிடம் கூறினார். தன்னை அனைவரும் கேப்டன் பதவிக்கு நாமினேட் செய்வார்கள் என பாலாஜி எதிர்பார்த்தாரா? என்பது தெரியவில்லை.

இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி நீங்க எப்பவுமே கார்னர்ல உட்கார்ந்து ஷிவானி கூட பேசிட்டு தான் இருக்கீங்க. ஸ்ட்ரேட்டஜின்னு சொல்லி சுரேஷ், அர்ச்சனா, சோம் எல்லார விட்டும் தள்ளி போய்ட்டீங்க. சனம் கூட சண்டை போட்டு, எல்லாருக்கும் பட்டப்பெயர் வச்சு இப்படி எல்லாம் பண்ணிட்டு இப்போ கடைசில இப்படி சொன்னா என்ன அர்த்தம்? என கேள்வி கேட்டு வருகின்றனர். 

I Have been cornered in this House, Says Balaji Murugadoss

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.