www.garudabazaar.com

Video: 'நெறைய' மாத்தி, மாத்தி பேசுறாரு... இந்த தடவ 'குறும்படம்' கன்பார்ம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வாரம் பாலாஜிக்கு கண்டிப்பாக ஏகப்பட்ட குறும்படங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனம்-பாலாஜி சண்டை, சோம்-பாலாஜி பிரச்சினை, ஆரி-பாலாஜி சண்டை என ஏகப்பட்ட சண்டைகள் இருக்கின்றன. மேலும் கமல் குறித்தும் அவர் ஒரு கருத்தை முன்வைக்க அதற்கு ஷிவானி, சம்யுக்தா இருவரும் ஆமாம் சாமி போட்டனர்.

We want Kurumpadam for Balaji Murugadoss, Netizens demand

இதனால் கண்டிப்பாக அவருக்கு ஒரு குறும்படம் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. நேற்று கோர்ட் டாஸ்க்கில் வார்னிங் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு ;பின்னர் நான் சொல்லவே இல்லை என பல்டி அடித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த கோர்ட் காட்சியை எடுத்து வீடியோவாக போட்டு இப்படி மாத்தி, மாத்தி பேசுறாரே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு இந்த வாரம் நீங்க கண்டிப்பா குறும்படம் போடணும் என கமலையும் டேக் செய்து ட்வீட்டி வருகின்றனர். முன்னதாக சக கலைஞர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என பாலாஜியிடம், கமல் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் பாலாஜி மீண்டும் சனமுடன் சண்டை போட்டு வைத்திருக்கிறார். இதனால் இந்த வாரம் கண்டிப்பாக கமலின் பேச்சில் அனல் பறக்கும், என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

We want Kurumpadam for Balaji Murugadoss, Netizens demand

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.