www.garudabazaar.com

உங்களுக்கு வேற 'பாட்டே' கெடைக்கல போல... கதை அப்படி போகுதோ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாட்டம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையொட்டி போட்டியாளர்கள் கிராமம், நகரம் என பிரிந்து டாஸ்க்குகளில் ஈடுபட்டனர். அனைவரும் பாரம்பரிய உடையணிந்து சாமி கும்பிட்டு ஆடிப்பாடி சந்தோஷமாக இருந்தனர். தொடர்ந்து சிலபல பஞ்சாயத்துகளும் நடந்தன.

Balaji Murugadoss sang in Bigg Boss House for Shivani

இந்த களேபரங்களுக்கு மத்தியில் பாலாஜி முருகதாஸ்-ஷிவானி பேசிக்கொண்ட ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் பெருத்த விவாதங்களை எழுப்பி உள்ளது. ஷிவானி அமர்ந்து சிலைக்கு பெயிண்ட் அடித்து கொண்டிருக்க அருகில் அமர்ந்து பாலாஜி அவருடன் பேசிக்கொண்டு இருந்தற்ற. அப்போது அவர் ஷிவானியை பார்த்து ஆல் எவர் பியூட்டி பாடலை பாடினார்.

பதிலுக்கு ஷிவானி ம்ம்ம் என சொல்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் தம்பி உங்களுக்கு பாட வேற பாட்டே கெடைக்கலையா? என பாலாஜியை கலாய்த்து வருகின்றனர். வேறு சிலரோ அந்த வாக்கிங்க்கு அப்புறம் ரெண்டு பேரும் எதிரும், புதிருமா தான் இருந்தீங்க இப்போ என்ன திடீர்னு பாட்டெல்லாம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Balaji Murugadoss sang in Bigg Boss House for Shivani

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.