www.garudabazaar.com

ஊட்டி விட்டதெல்லாம் சரிதான்... ஆனா 'அந்த' விஷயத்தை மறந்துட்டீங்களே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் தங்க சுரங்கம் டாஸ்க்கில் வென்ற அர்ச்சனா, பாலாஜி குழுவினர் செய்த அலப்பறை சிரிக்கும்படியாக இருந்தது. இதனால் பிக்பாஸ் வீடே விக்ரமன் படமாக காட்சி அளித்தது. அந்தளவுக்கு ஆனந்தம் ஆனந்தம் என போட்டியாளர்கள் வீடு முழுவதும் சுற்றிச்சுற்றி வந்தனர்.

Shivani feed fruits to Balaji Murugadoss, Twitter Reacts

இதற்கிடையில் பாலாஜி-ஷிவானி இடையே ஒரு தனி டிராக் ஓடியது. டாஸ்க் படி ஷிவானி பழங்களை ஸ்பூனில் எடுத்து பாலாஜிக்கு ஊட்டி விட்டார். ஆனால் டாஸ்க் முடிந்தும் கூட ஷிவானி அதை செய்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்பார்த்து பக்கத்து பெட்டில் இருந்த சம்யுக்தா கூட தம்பி டாஸ்க் முடிஞ்சிருச்சு என கலாய்த்தார்.

இதேபோல சனமிடம் பாலாஜி ஸாரி கேட்டு அவரை ஆறுதல் படுத்தியபோது கேப்ரியலாவுடன் சேர்ந்து ஷிவானி அவரை கிண்டலடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு கேப்ரியலா எதுவும் சொல்லவில்லை என்றாலும் கூட ஷிவானி டென்ஷன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மேல் இது தொடருமா? காத்திருந்து பார்க்கலாம்! 

Shivani feed fruits to Balaji Murugadoss, Twitter Reacts

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.