'என்னது 3 முட்டைக்கு 1672 ரூபாயா ?' - பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களான விஷால் - சேகர் கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் . இக்கூட்டணியின் இசையில் சல்மான் கான் நடித்த 'பாரத்', வார் உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தது.

Hotel charged Rs.1,672 for 3 Eggs to Music Director Shekhar Ravjiani

இந்நிலையில் விஷால் - சேகர் கூட்டணியில் சேகர் சமீபத்தில் அகமதாபாத்தில் ஒரு உணவகத்தில் முட்டை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு  ரூ. 1672 ரூயாய்க்கு பில் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

அதில், ஹோட்டல் பில்லின் புகைப்படத்தை பகிர்ந்த பகிர்ந்த அவர், '3 முட்டைக்கு ரூ.1672 - ஆ ?' என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதே போன்று நடிகர் ராகுல் போஸ் தனக்கு 2 வாழைப்பழத்துக்கு ரூ.442 விலை கொடுத்து வாங்கியதை வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.