5 ஸ்டார் ஹோட்டல் வழங்கிய உணவில் புழுக்கள்! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 27, 2019 11:21 AM
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய நடிகை மீரா சோப்ராவுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நடிகை மீரா சோப்ரா இவர் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜாம்பாவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் மீரா சோப்ரா. மீரா சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் மீரா சோப்ரா.
இந்நிலையில் மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளார். அதில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிவதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில் புழு ஒன்று நெளிந்து செல்வதும் வீடியோவில் தெரிகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில்தான் இப்படி புழுக்கள் நெளிவதாக மீரா சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறேன், ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தபோது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற ஹோட்டல்களில் தங்கி அதிக கட்டணத்தை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் புழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக இந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். இங்கு வந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லை. அதற்கான காரணம் இப்போதுதான தெரிகிறது என கூறியுள்ளார் மீரா சோப்ரா