சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் வெளியாகியுள்ள 'ஆக்சன்' ஸ்நீக் பீக் வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 16, 2019 06:44 PM
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் படம் “ஆக்ஷன்”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, டட்லி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் ராம்கி, பழ. கருப்பையா, சாயா சிங், ஷாரா, யோகி பாபு, சாயாஜி ஷிண்டே கபீர் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவிந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் வெளியாகியுள்ள 'ஆக்சன்' ஸ்நீக் பீக் வீடியோ இதோ வீடியோ
Tags : Vishal, Tamannaah Bhatia, Sundar C, Action