சூப்பர் ஸ்டாருடன் 'சிவாஜி', தளபதி விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', விக்ரமுடன் 'கந்தசாமி' என தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வந்ததவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
![](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/heres-why-shriya-saran-kissed-her-husband-nominates-arya-and-allu-arjun-for-the-photos-pictures-stills.jpg)
நடிகை ஸ்ரேயா ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ்( Andrei Koscheev) என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகை ஸ்ரேயா நடிப்பில் 'நரகாசூரன்', 'சண்டக்காரி' உள்ளிட்ட படங்கள் வெளிவரக்காத்திருக்கின்றன.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கணவர் பாத்திரங்கள் கழுவி அவருக்கு உதவுகிறார். இதுகுறித்து பெருமையாக தெரிவித்த ஸ்ரேயா, ''ஆண்கள் தங்கள் மனைவிக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்ற வீடியோவை அவர் வெளியிட வேண்டும்'' என்று ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ஆர்யா, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோருக்கு சேலஞ்ச் விடுத்தார்.