Nenjuku Needhi

"சீமைக்கு போன வாத்தியாரு வந்துருக்காரு டி.." 'Legend' படத்தின் களைகட்டும் 'வாடிவாசல்' பாடல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்து வரும் லெஜண்ட் படத்தில் இருந்து, இரண்டாவது பாடல் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Saravanan legend movie second single vaadivaasal released

சரவணன், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதலா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'லெஜண்ட்'. நூற்றுக்கணக்கான விளம்பர படங்களையும், விசில் திரைபடத்தையும் இயக்கி உள்ள பிரபல இயக்குனர்கள் ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 

சரவணன் மற்றும் ஊர்வசி ரவுதலா ஆகியோருடன் விவேக், பிரபு, யோகி பாபு, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

சரவணன் நடிக்கும் லெஜண்ட்..

அதே போல, இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். விளம்பர படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். இதன் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இரண்டாவது சிங்கிள்

இதற்கு அடுத்தபடியாக, லெஜண்ட் திரைப்படத்தில் இருந்து 'மொசலோ மொசலு' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த பாடலின் லிரிக் வீடியோவில், சரவணாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் தோன்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது சிங்கிளான வாடிவாசல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Saravanan legend movie second single vaadivaasal released

அதன்படி, இன்று வெளியான லெஜண்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான 'வாடிவாசல்', மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும், இந்த பாடலின் வீடியோ கிராமத்தின் கோவில் திருவிழா பின்னணியில் இருக்க, நடிகை ராய் லட்சுமியும் சரவணனுடன் இணைந்து நடனமாடி உள்ளார்.

அடுத்தடுத்து, லெஜண்ட் படத்தின் இரண்டு பாடல்களும் மக்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Saravanan legend movie second single vaadivaasal released

People looking for online information on Harris Jayaraj, JD Jerry, Legend, Legend Saravanan, Vaadivasal Song will find this news story useful.