RRR Others USA
www.garudabazaar.com

போடு! மாநாடு படத்தின் பிரபல வசனத்தை title ஆக வைத்த 'தில்லுக்கு துட்டு' இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தில்லுக்கு துட்டு மற்றும் இடியட் போன்ற படங்களை இயக்கிய ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

director Ram bhala next movie title vanthan suttan repeatu

தீயாய் பரவும் பீஸ்ட் படத்தின் புதிய தமிழ் போஸ்டர்.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புது அப்டேட்!

லொள்ளுசபா to தில்லுக்கு துட்டு…

விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நய்யாண்டி நிகழ்ச்சியான லொள்ளுசபாவில் இருந்து ஏராளமான நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்து கலக்கி வருகின்றனர். அந்தவகையில் முன்னணியில் இருப்பவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் லொள்ளு சபாவில் பல எபிசோட்களை இயக்கி ஹிட்டுக்கு காரணமாக அமைந்த இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் சந்தானம்

பேயைக் கலாய்க்கும் Trend ….

director Ram bhala next movie title vanthan suttan repeatu

2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. ஹாரர் காமெடி மாதிரியான படங்களிலே பேயையே  கலாய்க்க கூடிய பேட்டர்னை  பயன்படுத்தி, சந்தானத்தின் நடிப்பில்  ‘தில்லுக்கு துட்டு’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் ராம் பாலா. மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் ராம்பாலா கூட்டணியில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான  தில்லுக்கு துட்டு 2 உருவாகி, அந்த படமும் பெரும் வெற்றி பெற்றது.

தில்லுக்கு துட்டு 2 வெற்றுக்குப் பிறகு ராம் பாலா இயக்கத்தி மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி மற்றும் பலரது நடிப்பில் ‘இடியட்’ திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதுவும் ஒரு பேய்க் காமெடி படமாக அமைந்திருந்தது.

director Ram bhala next movie title vanthan suttan repeatu

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு…

இந்நிலையில் தற்போது இயக்குனர் ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ’வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்திரமௌலி, மீனாக்ஷி மற்றும் ரெபா மோனிகா ஆகியோர் நடிக்கின்றனர். டூ மூவி பஃப்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு ‘ரோலர் கோஸ்டர் நகைச்சுவை படத்தை ரசிக்க தயாராகுங்கள்’ எனக் கூறியுள்ளார். மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா பேசும் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு ‘ என்ற வசனம் பிரபலமடைந்து சமூகவலைதளங்களில் மீம் டெம்ப்ளேட்டாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. பிரபல நடிகை பகிர்ந்த வைரல் BTS போட்டோஸ்

director Ram bhala next movie title vanthan suttan repeatu

People looking for online information on Ram bhala, Ram Bhala new movie updates, Vanthan suttan repeatu will find this news story useful.