RRR Others USA
www.garudabazaar.com

இளையராஜா யுவன் இசையில் மாமனிதன்…. இசை வெளியீடு எங்கு? எப்போது? Viral போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமனிதன் திரைப்படத்துக்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர்.

Ilayaraaja Yuvan combo maamanithan audio launch update

போடு! மாநாடு படத்தின் பிரபல வசனத்தை title ஆக வைத்த 'தில்லுக்கு துட்டு' இயக்குனர்!

சீனு ராமசாமி- விஜய் சேதுபதி வெற்றிக்கூட்டணி…

இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் இதுவரை தென் மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. அவர்கள் கூட்டணியில் நான்காவது படமாக மாமனிதன் உருவாகியுள்ள நிலையில் மே 20 ஆம் தேதி அந்த படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்காகப் பெற்றுள்ளார்.

Ilayaraaja Yuvan combo maamanithan audio launch update

முதல்முறை இணைந்த யுவன் - இளையராஜா

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த காரணத்துக்காகவே ரசிகர்கள் இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு முன்னர் இளையராஜா யுவன் இசையில் பட்டியல் படத்தில் ‘நம்ம காட்டுல மழை பெய்யுது’ மற்றும் மாரி படத்தில் இடம்பெற்ற ‘மாரியின் ஆனந்தி’ உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியுள்ளார். அதுபோல யுவனும் இளயராஜா இசையமைத்த நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சில பாடல்களை பாடியுள்ளார். ஆனால் முதல்முறையாக இருவரும் சேர்ந்து இசையமைப்பது மாமனிதன் படத்துக்குதான். இளையராஜா இதற்கு முன்னர் எம் எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ilayaraaja Yuvan combo maamanithan audio launch update

பாண்டிச்சேரியில் இசை வெளியீடு

இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது ரசிகர்கள் அதிகமும் எதிர்பார்த்த இசை வெளியீடு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதுபற்றி அறிவித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி ‘சுதந்திர காலகட்டத்தில் இந்திய சுதேசிகளுக்கு அடைக்கலம் தந்த புதுவையில் 'மாமனிதன்' திரைப்படத்தின் இசை வெளியீடு’ என அறிவித்துள்ளார்.

மேலும் இது சம்மந்தமாக வெளியாகியுள்ள போஸ்டரில் மாமனிதன் இசை வெளியீடு பாண்டிச்சேரியில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் செண்டரில் ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயாய் பரவும் பீஸ்ட் படத்தின் புதிய தமிழ் போஸ்டர்.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புது அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Ilayaraaja Yuvan combo maamanithan audio launch update

People looking for online information on Ilayaraaja, Ilayaraaja Yuvan combo, Maamanithan, Maamanithan audio launch update, Vijay Sethupathy, Yuvan Shankar Raja will find this news story useful.