IndParty
www.garudabazaar.com

ரஜினிகாந்த் கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண்...யுவன் இசை... வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் ஹரிஷ் கல்யாண். தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.

harish kalyan star movie first look released ரஜினி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண்

இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா என மூன்று பேரும் மீண்டும் இணையும்  படத்திற்கு 'ஸ்டார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள் என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனென்றால், 'தளபதி' படத்தின் ரஜினி கெட்டப் போலவே இதன் பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

harish kalyan star movie first look released ரஜினி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண்

People looking for online information on Harish Kalyan, Star will find this news story useful.