IndParty
www.garudabazaar.com

இந்த வாரம் அவருக்கு ஒரு 'குறும்படம்' போடுங்க... ரசிகர்கள் கோரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயந்திர மனிதா டாஸ்க்கால் வீட்டில் பல்வேறு சண்டைகள் நடந்து இந்த வாரமே ஹைவேஸ் ரேஸ் போல ஒரே பரபரப்பாக இருந்தது. அர்ச்சனா அப்பா விஷயத்தை நிஷா இழுக்க அது பெரிய கலவரத்தில் முடிந்தது. ஆனால் இருவரும் சமாதானமாகி விட்டனர். ஆனால் ரோபோக்களுக்கு பெயர் சூட்டிய அனிதா மாட்டிக்கொண்டார்.

We want Kurumpadam for Rio Raj, Fans requested to Bigg Boss

ஒர்ஸ்ட் பெர்பாமராக அவர் தேர்வு செய்யப்பட பொங்கித் தீர்த்து விட்டார்.இதையடுத்து ரியோவை அவர் ஒர்ஸ்ட் பெர்பாமர் என நாமினேட் செய்தார். கேப்ரியலாவை அவர் காப்பாற்ற முயற்சி செய்ததாக அனிதா சொல்ல, நான் அப்படி செய்யவே இல்லை என ரியோ தன்னுடைய வாதத்தில் அழுத்தமாக நின்றார். ஆனால் அந்த டாஸ்க்கின் இடையில் நாங்க உன்ன காப்பாத்த தான் முயற்சி செய்தோம்.

என்று கேபியிடம், ரியோ நிஷா மற்றும் அர்ச்சனா முன்னிலையில் பேசியிருந்தார்.இதற்கு நெட்டிசன்கள் குறும்படம் எடுத்து போட்டு உங்க டீமுக்குள்ள ஒரு கருப்பு ஆடு இருக்கு பாலாஜி என கலாய்த்தனர். ஆனால் இதுதொடர்பாக நேற்று அனிதாவிடம் பேசியபோதும் ரியோ தான் கேபியை காப்பாற்ற முயற்சி செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு ஒரு குறும்படம் போடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

We want Kurumpadam for Rio Raj, Fans requested to Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.